குருதியைக்
காணக் கிடைப்பதில்லை
என் இதயத்தில்
எங்கு தொட்டாலும்
கற்களும் முட்களுமாய்
என் கல்லறைச் சுவர்களில்
குப்பை மேனிச் செடிகள்
வறண்டு கிடக்கின்றன
குற்றுயிராய்த் தவித்த என்
பூக்காடுகள் இன்று
புட்காடுகளாய்
நாகதாளி ஒன்று
நாவறண்டு நிற்கின்றது
பழத்தை விற்றுவிட்டுப்
பச்சைத் தண்ணீர் கடன் வாங்க !!!!
No comments:
Post a Comment