Powered By Blogger

Friday, September 9, 2011

சத்தியமாய் எதுவும் தோன்றாது

கன்னியவள் காலடியில்
முத்தமிடத் தோன்றும்
விண்ணிலவோ அவள் முகத்தில்
வியர்வையாகத் தோன்றும்

மின்னலினால் அவள் விழியில்
சிக்கி விடத் தோன்றும்
பின்னலான கூந்தளிருளில்
தொலைந்து விடத் தோன்றும்

தென்றலாகி அவள் உடலை
தீண்டி விடத் தோன்றும்
மன்றாடி அவள் நெஞ்சம்
தஞ்சம் புகத் தோன்றும்

கொவ்வைப் பழ இதழைக் கொஞ்சம்
கௌவ்வி விடத் தோன்றும்
செம்மைக் கவி மொழியை
பாடலாக்கத் தோன்றும்

நடக்கையிலே  பாதத்தடி
மணலாகத் தோன்றும்
சிரிக்கையிலே புன்னகையின்
இசையாகத் தோன்றும்

சீக்கிரமாய் அவள் பார்வை
சித்தமெனத் தோன்றும்
சித்திரையில் அவள் வந்தால்
வசந்தமெனத் தோன்றும்

அவள் ஆடைக்குள் அரை நொடிகள்
செத்து விடத் தோன்றும்
ஆசை கொண்டு அவளில் என்னை
ஒளித்து விடத் தோன்றும்

கோபத்தில் அவள் திட்டும்  போதும்
பாசத்துடன்  அவள் எனைப் பார்க்கும் போதும்
சத்தியமாய் என் நெஞ்சில்
எதுவும் தோன்றாது

1 comment:

  1. ஆசை கொண்டு அவளில் என்னை
    ஒளித்து விடத் தோன்றும்...
    keep it up aathi..

    ReplyDelete