பிரித்தறியா சொற்களையும்
பிரித்தறிந்து கவிதை சொல்லும்
உன் பேச்சுக்கள்
பிரியமெனும் வார்த்தையுடன்
இனிமையையும் சேர்த்து நல்கும்
உன் புன்னகைகள்
தெரியாத உன் முகமும்
அறியாத உன் குரலும்
பிரிவாக தோன்றவில்லை எனக்கு
பிரிந்தாலும் சேர்த்துவிடும்
நம்மிருவர் நட்பு என
தெரிந்துவிடும் உனக்கு
பிரிந்து வந்த ஆறு சேரும்
சமுத்திரத்திலே
சமுத்திரமோ பிரிவதில்லை எப்போதும்
நிலத்தை விட்டு
நம் நட்போ எப்போதும் அதை போல
பிரியாது
பிரிவு தந்த பிரியமோ எப்போதும் அழியாது
புரியாத அர்த்தங்களை புரிய வைக்கும்
உன் பெயரே !
மரித்து விட செவிகளையும் உயிர்த்து
விடும் உன் மொழிகள்
இருவர்க்கும் எப்போதும் பிரிவொன்று
நேராது
நேரத்து விட்டால் உடலிலன்று உயிருடனே
தரியாது ......
No comments:
Post a Comment